ஈரோட்டில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான்
By DIN | Published On : 24th July 2022 02:35 PM | Last Updated : 24th July 2022 02:35 PM | அ+அ அ- |

ஈரோட்டில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு அடுத்துள்ள மாமரத்துப்பாளையம் பகுதியில் தனியார் அமைப்பின் சார்பில் அனைவருக்கும் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது . இதில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க- தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாமரத்துப்பாளையம் செங்குந்தர் நகரில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது, ஒரு கிலோ மீட்டர் வரை சென்று நிறைவடைந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.