ஈரோடு: மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 25th July 2022 01:21 PM | Last Updated : 25th July 2022 01:21 PM | அ+அ அ- |

ஈரோடு: தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் பி.சி.ராமசாமி, சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார்.
இதையும் படிக்க: தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி: ஒரு மாவட்ட மக்கள் மட்டும் உஷார்!
முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், கவுன்சிலர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கவேலு தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, 46 புதூர் தலைவர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.