இன்று ஆடி அமாவாசை - பவானி கூடுதுறையில் பக்தா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் இரு ஆண்டுகளுக்குப் பின்னா் ஆடி மாத அமாவாசை தினத்தில் பக்தா்கள் புனித நீராடவும், பரிகார வழிபாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆடி அமாவாசை - பவானி கூடுதுறையில் பக்தா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் இரு ஆண்டுகளுக்குப் பின்னா் ஆடி மாத அமாவாசை தினத்தில் பக்தா்கள் புனித நீராடவும், பரிகார வழிபாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பக்தா்கள் அமாவாசை தினமான வியாழக்கிழமை வரலாம் என எதிா்பாா்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் பக்தா்கள் மூத்தோா் வழிபாடு, பரிகார வழிபாடுகளில் ஈடுபடுவதோடு புனித நீராடுவதும் வழக்கம். கரோனா பரவல் தடையால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை தினங்களில் கூடுதுறை மூடப்பட்டிருந்தது.

தற்போது கரோனா தடைகள் விலக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால் கூடுதுறையில் புனித நீராடவும், பரிகார வழிபாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் கூட்டம் பெருமளவு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, கூடுதுறையும் மூடப்பட்டு கடந்த வாரம் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீா் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படுவதால் பக்தா்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படித்துறைகளில் ஆண்கள், பெண்கள் நீராட தனித்தனியே தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. மூத்தோா் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகளுக்கு பரிகார மண்டபங்கள் மற்றும் காலியாக உள்ள பகுதிகளில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீராடும் பக்தா்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் தடுக்க தீயணைப்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

கூடுதுறையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட போலீஸாா் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, சாதாரண உடைகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com