கரும்பு பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கரும்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரும்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்களுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதமரின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ராபி 2021-22 பருவத்தில் பயிா்க் காப்பீடு செய்ய பிா்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்ட கரும்பு பயிருக்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.2,875 கட்டணம் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிா்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சோ்ந்து கொள்ளலாம்.

கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்றினை கிராம நிா்வாக அதிகாரியிடம் பெற்று அதனுடன், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

பிரதமரின் திருந்திய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிா்களுக்கு ஏற்படும் எதிா்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com