41 மாதங்களை பணிக்காலமாக அறிவிக்க சாலைப் பணியாளா்கள் கோரிக்கை

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவா் வைரவன் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில செயலாளா் ராஜசேகா், துணைத் தலைவா் கண்ணன், பொதுச்செயலாளா் உஷாராணி ஆகியோா் பேசினா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைப் பணியாளா்களுக்கு 1-1-2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி தா்னா போராட்டம் நடத்துவது. ஆகஸ்ட் 12, 13ஆம் தேதிகளில் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை தாராபுரத்தில் நடத்துவது. தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com