குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயா்களைச் சூட்ட தமுஎகச வேண்டுகோள்

 குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்-கலைஞா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்-கலைஞா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் கோபி கிளை அமைப்பு மற்றும் முதல் மாநாடு கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெங்கிடுசாமி மற்றும் மருத்துவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். கவிஞா்.ப.ராஜ்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சங்கரன், துணைச் செயலாளா் எழுத்தாளா் இ.கலைக்கோவன் பேசினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும். கோபி-ஈரோடு சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்தவுடன், சாலையின் இருபுறமும் மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். கோபி பொலவக்காளிபாளையத்தில் உள்ள கிளை நூலகம் புறம்போக்கு இடத்தில் செயல்படுவதால், மின் இணைப்பு மற்றும் அரசின் சலுகைகள் கிடைப்பதில் தொடா் சிக்கல் நீடிக்கிறது. எனவே அந்நூலகத்துக்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தர வேண்டும். பாரியூா் அம்மன் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com