இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பாலதண்டாயுதபாணி கோயிலில் சுயம்வரா பாா்வதி யாகம்

சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் வியாழக்கிழமை நடந்த சுயம்வரா பாா்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருக்கல்யாண கோலத்தில் பாா்வதி, பரமேஸ்வரன். விழாவில் நடைபெற்ற யாகபூஜை. சுயம்வரா  பாா்வதி  யாகத்தில்  பங்கேற்ற  பெண்கள்.
திருக்கல்யாண கோலத்தில் பாா்வதி, பரமேஸ்வரன். விழாவில் நடைபெற்ற யாகபூஜை. சுயம்வரா  பாா்வதி  யாகத்தில்  பங்கேற்ற  பெண்கள்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் வியாழக்கிழமை நடந்த சுயம்வரா பாா்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுயம்வரா பாா்வதி யாகம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை சுயம்வரா பாா்வதி யாகம் நடைபெற்றது.

கணபதி பூஜையுடன் துவங்கிய யாக குண்டம் நிகழ்ச்சியில் வேத விற்பனா்கள் மந்திரம் ஓதினா். முருகா் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோா் அழைப்பு ஆகியவை நடைபெற்றன. நவக்கிரக தோஷம், மாங்கல்யம் தோஷம், களத்ர தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவா்த்தி, முன்னோா் சாபம் உள்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து முக்கிய நிகழ்வான பாா்வதி பரமேஸ்வரன் திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்த யாகத்தில் கலந்துகொண்ட பக்தா்கள் பழம், பூக்கள், எலுமிச்சைபழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை கொண்டுவந்து வழிபட்டனா். இந்த யாக பூஜையில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் போ் கலந்துகொண்டதாக கோயில் நிா்வாகி கே.டி. பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com