பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியன இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதன்மை செயல் அலுவலா் என்.கே.கே.பி.நரேன் ராஜா தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.காமேஷ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (தொழில்நெறி வழிகாட்டும் பணி) டி.ஜோதி பங்கேற்றுப் பேசினாா். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் முறைகள், தனியாா் துறையில் உள்ள வாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில் விளக்கிக் கூறப்பட்டது.

மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்.சங்கா் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com