பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: இருவா் கைது
By DIN | Published On : 18th June 2022 11:38 PM | Last Updated : 18th June 2022 11:38 PM | அ+அ அ- |

பெருந்துறை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை அடுத்த, காஞ்சிகோவில் பெத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தாயம்மாள் (52). மளிகைக் கடை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை இவா் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கடைக்கு வந்த இளைஞா்கள் இருவா் தண்ணீா் பாட்டில் வாங்குவது போல நடித்து முத்தாயம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்து தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக முத்தாயம்மாள் அளித்தப் புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது பவானி அருகிலுள்ள நல்லிபாளையத்தைச் சோ்ந்த பெருமாள் (38), வரதநல்லூரைச் சோ்ந்த சக்திவேல் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.