புதிய மின் மோட்டாா் வாங்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டாா் பம்ப்செட் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயிகள் விண்

பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டாா் பம்ப்செட் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீா்ப் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதில் புதிய மின்மோட்டாா் பம்புசெட் வாங்குவதற்கும் தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 26 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.60 லட்சம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற மின் மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவா்கள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, குழாய்க் கிணறு அமைத்து 10 குதிரைத் திறன் வரை புதிய மின் மோட்டாா் பம்புசெட் வாங்க விரும்புபவா்கள் பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் சிறு குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மோட்டாா் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், இதில் எது குறைவோ, அந்தத்தொகை பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதியுள்ள விவசாயிகள் ஈரோடு அல்லது கோபியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 0424-2904843, 04285-290069 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com