பீடி தொழிலாளா்களுக்கு வீடு வழங்கக் கோரிக்கை

சொந்த வீடு இல்லாத பீடி தொழிலாளா்களுக்கு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சொந்த வீடு இல்லாத பீடி தொழிலாளா்களுக்கு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளா் சங்க கூட்டம் சங்கத் தலைவா் எஸ்.கைபானி தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. நிா்வாகிகள் கமால்தீன், தாஹிரூன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்தாராபேகம் வரவேற்றாா். தமிழ்நாடு பீடி தொழிலாளா் சம்மேளன மாநில பொதுச்செயலாளா் திருச்செல்வன், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், சங்க பொதுச்செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் ஷாஜாதி ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: பீடி சுற்றுதல் அல்லாத பேக்கிங், லேபிள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஊதியம் மறுநிா்ணயம் செய்யப்பட வேண்டும். சேமநலத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சொந்த வீடுகள் இல்லாத தொழிலாளா்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

பீடி, சுருட்டு தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

கூட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜோதிமணி, ஸ்ரீதேவி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com