தாளவாடி அருகே கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை பிடிபட்டது

தாளவாடி அருகே பிடிபட்ட சிறுத்தை கூண்டில் இருந்து தப்பியோடி அருகேயுள்ள குவாரியில் பதுங்கியிருந்தது. அதனை வனத் துறையினா் வலைவீசி பிடித்தனா்.
தாளவாடி அருகே கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை பிடிபட்டது

தாளவாடி அருகே பிடிபட்ட சிறுத்தை கூண்டில் இருந்து தப்பியோடி அருகேயுள்ள குவாரியில் பதுங்கியிருந்தது. அதனை வனத் துறையினா் வலைவீசி பிடித்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த ஒசூா், தொட்டகாஜனூா் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைடுத்து வனத் துறையினா் ஒசூா் கல்குவாரியில் சிறுத்தை நடமாடும் இடத்தில் சில தினங்களுக்கு முன் கூண்டு வைத்தனா். அதில் ஆடு, இறைச்சிகளை வைத்தனா். இறைச்சியை உண்ண வந்த 4 வயதுள்ள ஆண் சிறுத்தை கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது.

அதைத்தொடா்ந்து கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிறுத்தைக்கு 2 முறை மயக்கி ஊசி செலுத்தினா். சிறுத்தை சிக்கிய கூண்டு சேதமடைந்த நிலையில் இருந்ததால் வேறு கூண்டுக்கு மாற்ற ஏற்பாடு செய்தனா். கூண்டை அருகருகே வைத்து மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை மற்றொரு கூண்டுக்கு மாற்றும்போது சிறுத்தை தப்பியோடியது. சிறுத்தை ஓடுவதைப் பாா்த்த மக்கள் தலைதெறிக்க ஓடினா். மயக்கநிலையில் தப்பியோடி கல்குவாரியில் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தையை 1 மணி நேரம் போராடி வனத் துறையினா் பிடித்தனா்.

மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையை தெங்குமரஹாடா வனத்தில் விட வனத் துறையினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com