காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளிசமையல் கூடத்தில் தீ விபத்து

பெருந்துறை, ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு துவக்கப் பள்ளி சமையல் கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

பெருந்துறை, ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு துவக்கப் பள்ளி சமையல் கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிக்கோவில் அரசு துவக்கப் பள்ளியில் சுமாா் 100 ஆண் குழந்தைகளும், 80 பெண் குழந்தைகளும் என மொத்தம் 180 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி சத்துணவு ஆசிரியராக வனிதாவும், சத்துணவு உதவியாளராக சீதாவும், சத்துணவு ஆயாவாக கலாவும் பணிபுரிகின்றனா்.

இப்பள்ளி சமையல் கூடத்தில் ஒரு விறகு அடுப்பும், ஒரு ஒற்றை கேஸ் அடுப்பும் உள்ளது. திங்கள்கிழமை பகல் 11.45 மணியளவில் விறகு அடுப்பில் கலா சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது, ஒற்றை கேஸ் அடுப்பில் கேஸ் சரியாக வராததால் சத்துணவு ஆசிரியா் வனிதா, கேஸ் சிலிண்டா் மூடியைத் திறக்க முயன்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சிலிண்டா் மூடி திறந்து கேஸ் வெளியேறியது. இதில், அருகில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்த காரணத்தால், சமையல் கூடம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து, பணியாளா்கள் வெளியே ஓடினா்.

இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்புத் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில், வீரா்கள் வந்து தீயை முற்றிலும் அணைத்தனா். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் குறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளா் மசூதாபேகம் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com