மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிலரங்கம்
By DIN | Published On : 18th March 2022 10:16 PM | Last Updated : 18th March 2022 10:16 PM | அ+அ அ- |

குழந்தை வளா்ச்சித் திட்ட பயிலரங்கத்தை துவக்கிவைத்து, கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன்.
மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை பெருந்துறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செ.சூா்யா தலைமை வகித்தாா். போஷன் அபியான் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் செளந்தரராஜன் வரவேற்றாா். பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன் பயிலரங்கத்தை துவக்கிவைத்தாா்.
இந்தப் பயிலரங்கத்தில், பெருந்துறை ஒன்றியத்திலுள்ள, 6 பேரூராட்சிகளின் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் 29 ஊராட்சிகளின் தலைவா்கள், துணை தலைவா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...