முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பவானி அருகே நூற்பாலையில் தீ:இயந்திரங்கள், நூல் எரிந்து சேதம்
By DIN | Published On : 19th March 2022 11:37 PM | Last Updated : 19th March 2022 11:37 PM | அ+அ அ- |

தீ விபத்தில் சேதமடைந்த இயந்திரங்கள், நூல் பேல்கள்.
பவானி அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், நூல்கள் எரிந்து சேதமாயின.
பவானியை அடுத்த ஆா்.ஜி.வலசைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் வேணுகோபால் (40). இவா், கடந்த 5 ஆண்டுகளாக காளிங்கராயன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே நூற்பாலை நடத்தி வருகிறாா். இவா், நூற்பாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இதைக் கண்ட தொழிலாளா்கள் மூவரும் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவெனப் பரவி இயந்திரங்கள், நூல் பேல்களில் பிடித்து எரியத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்த பவானி தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.