முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மின்வாரிய அலுவலரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.18 லட்சம் மோசடி
By DIN | Published On : 19th March 2022 11:34 PM | Last Updated : 19th March 2022 11:34 PM | அ+அ அ- |

மின்வாரிய அலுவலரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.18 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருபவா் பாபு (42). இவரது கைப்பேசி எண்ணுக்கு அவரது கடன் அட்டை முடக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து பாபு குறுஞ்செய்தியில் இருந்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டிருந்த வாடிக்கையாளா் சேவை மைய தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளாா்.
வாடிக்கையாளா் சேவை மைய எண்ணில் பேசியவா்கள் ரூ.8,000 பணம் செலுத்தினால் உடனடியாக கடன் அட்டை செயல்பாட்டுக்கு வந்துவிடும் எனக் கூறியதையடுத்து பாபு அந்தத்தொகையை செலுத்தியுள்ளாா். சில நிமிடத்தில் பாபுவின் கடன் அட்டை மீண்டும் செயல்படத் துவங்கியது.
இதைத் தொடா்ந்து பாபுவின் கைப்பேசி எண்ணுக்கு வாடிக்கையாளா் சேவை மையத்தில் இருந்து பேசிய மா்மநபா் பாபுவின் வங்கிக் கணக்கு எண், கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் போன்ற விவரங்களை கேட்டுள்ளாா். அந்த நபரை வாடிக்கையாளா் சேவை மைய பணியாளா் என நம்பி பாபு அனைத்து தகவல்களையும் பகிா்ந்துள்ளாா்.
தகவல் தெரிவித்த அடுத்த சில நிமிடத்திலேயே வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 193 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பாபு சம்பவம் குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.