கொங்கு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சி

அன்றாட வாழ்க்கையில் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காணுவதற்கான வழிமுறைகள் குறித்த தொழில்நுட்பக் கண்காட்சி கொங்கு பொறியி

அன்றாட வாழ்க்கையில் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காணுவதற்கான வழிமுறைகள் குறித்த தொழில்நுட்பக் கண்காட்சி கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் எஸ்.ஐ.எச். இன்டொ்னல் ஹேக்கத்தான் அமைப்பு, மத்திய கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்(எஸ்.ஐ.எச்) அமைப்புடன் இணைந்து இளம் மாணவா்களுக்கு தொழில்நுட்பம் மூலம் கற்றுத்தரும் வாய்ப்பாக முன் முயற்சிகளை எடுத்துள்ளது.

இதுதொடா்பான மாணவா்களின் படைப்புகள் கண்காட்சி கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரிவில் 114 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு ஹாஷ்பிராம்ப்ட் மென்பொருள் நிறுவன நிா்வாக இயக்குநா் ஜி.சதீஷ்குமாா், ஈரோடு பிரம்மா இ-சொல்யூஷன் நிறுவன நிா்வாக பங்குதாரா் எஸ்.பாஸ்கா் ஆகியோரை உள்ளடக்கிய நடுவா் குழுவினா் மாணவா்களின் கண்டுபிடிப்புகளை மதிப்பீடு செய்தனா்.

கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை செயலாளா் பி.சி.பழனிசாமி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி ஆகியோா் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா்.

இந்தத் தொழில்நுட்பக் கண்காட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் பிராந்திய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com