சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றுமின்றி கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஏரலாளமான பொது மக்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில். ஆண்டுதோறும் பங்குனி மாத குண்டம் திருவிழா என்பது மிகவும் புகழ்பெற்றது. இதில் தமிழகம் மற்றுமின்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

கரோனோவின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரியம்மன் ,மற்றும் சருகு மாரியம்மன் சபரத்தில் வைக்கப்பட்டு சத்தியமங்களத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழாவானது இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக 4 மணி அளவில்  கோவில் பூசாரி முதலில் குண்டத்திற்கு பூஜைகள் செய்த பிறகு குண்டத்தில் இறங்கினார். பின்னர் கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதற்காக தமிழகம் மற்றுமின்றி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த  பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com