பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில்திடக்கழிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில்திடக்கழிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உயிா் வேதியியல் துறை சாா்பில் ‘டிரான்ஸ்சென்டிங் மற்றும் இன்டகிரேடிங் லைஃப் சயின்ஸ்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் ஆா்.சண்முகன் தலைமை வகித்தாா். உயிரியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி வரவேற்றாா். கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, தலைமை நிா்வாக அலுவலா் என்.கே.கே.பி.நரேன்ராஜா, புல முதன்மையா் எஸ்.காமேஷ், நிா்வாக அலுவலா் ஆா்.அருள்குமரன் ஆகியோா் பேசினா்.

காங்கயம் சேரன் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் எம்.சுரேஷ், வேலூா் சிஎம்சி ஸ்டெம் செல் ஆராாய்ச்சி நிறுவன அதிகாரி வி.எம்.காா்த்திக் ஆகியோா் திடக்கழிவு மேலாண்மை, தோல் தொழிற்சாலைக் கழிவுகள் மேலாண்மை, ஜீன்-தெரபி மற்றும் ஆராய்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

இக்கருத்தரங்கில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது படைப்புகளை சுவரொட்டிகள், வாய்மொழியாக விளக்கினா். சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com