முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி
By DIN | Published On : 03rd May 2022 09:39 AM | Last Updated : 03rd May 2022 01:00 PM | அ+அ அ- |

ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரண்யா
ஈரோடு: ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார்.
ஈரோடு-பூந்துறை சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி சரண்யா.(28). இன்று காலையில் வழக்கம் போல் மளிகை கடைக்கு வந்த சரண்யா, இரும்பு கதவை திறக்க முயன்றார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திங்கள்கிழமை பெய்த மழையின் போது பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் எனத்தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வட்ட காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.