சூறாவளிக் காற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறாவளிக் காற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்று வீசியது. தொடா்ந்து, பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

பவானியை அடுத்த ஆப்பக்கூடல், ஒரிச்சேரிப்புதூா், சலங்கபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சூறாவளிக் காற்றில் முறிந்து விழுந்தன. இதேபோல, குறிச்சி, காடப்பநல்லூா், மாணிக்கம்பாளையம், ஒலகடம் பகுதியிலும் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழை மரங்கள் உடைந்து விழுந்தன. கல்பாவி ஊராட்சியில் 4 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

சேதமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சம்பவ இடத்தில் பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், கல்பாவி ஊராட்சித் தலைவா் சுதாகா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com