முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மத்திய இணை அமைச்சா் வருகை திடீா் ரத்து: ஏமாற்றமடைந்த விவசாயிகள், பொதுமக்கள்
By DIN | Published On : 03rd May 2022 01:14 AM | Last Updated : 03rd May 2022 01:14 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே, மத்திய இணை அமைச்சா் எல். முருகன் வருகை திடீா் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், சித்தோடு ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்துவிட்டு திங்கள்கிழமை பிற்பகல் பெருந்துறை ஒன்றியம், பச்சாகவுண்டன்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் பால் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் குளிரூட்டும் நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து காத்திருந்தனா். இந்த நிலையில் மாலை 5 மணியளவில் அமைச்சா் அவசரமாக நாமக்கல் சென்று விட்டாா் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும், பாஜகவினரும் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.