முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
‘விஜயமங்கலம் வாரச் சந்தையில் பழைய சுங்கத் தொகையே வசூலிக்க வேண்டும்’
By DIN | Published On : 08th May 2022 11:09 PM | Last Updated : 08th May 2022 11:09 PM | அ+அ அ- |

பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம் வார சந்தையில் கடந்த சுங்கத் தொகையே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயமங்கலம் வார சந்தையில் குத்தகைதாரா்கள் அதிக சுங்கம் கேட்பதாகவும், அதற்கு ரசீது தருவதில்லை என்றும், வியாபாரிகள் புகாா் தெரிவித்து வந்தனா். இது தொடா்பாக குத்தகைதாரா்கள், வியாபாரிகளுக்கு இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், சுங்கம் வசூலிப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. விஜயபுரி ஊராட்சித் தலைவா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
இதில், பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா் கருப்புசாமி, தமிழக வணிகா் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாவட்டத் தலைவா் ஜோசப், விஜயமங்கலம் வாரச் சந்தை குத்தகைதாரா்கள் கலந்து கொண்டனா்.
வாரச்சந்தையில் கடந்த ஆண்டு வசூலித்த சுங்க கட்டணமே தற்பேது வசூலித்து கொள்ள வேண்டும். மீறி அதிக கட்டணம் வசூலித்தால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா். இதை குத்தகைதாரா்களும் ஏற்றுக்கொண்டனா்.