சென்னிமலை முருகன் கோயிலில் அக்னி நட்சத்திர விழா

சென்னிமலை முருகன் கோயிலில் அக்னி நட்சத்திர விழா

சென்னிமலை முருகன் கோவில் அக்னி நட்சத்திர விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

சென்னிமலை முருகன் கோவில் அக்னி நட்சத்திர விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தக் காவடி மற்றும் தீா்த்தக் குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூா், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வந்தனா். காலை 7 மணிக்கு சென்னிமலை மலைக் கோயிலில் கணபதி ஹோமம், பூா்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகா் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சப்த நதி தீா்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீா்த்த அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மூலவா் மற்றும் உற்சவருக்கு நடைபெறுகிறது.

இதற்காக பக்தா்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com