ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள்

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் 3,700 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள்

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் 3,700 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹிலாரியோ 22 என்ற தலைப்பில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 167க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 3,700 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில் மெகந்தி, முக வண்ணம் பூசுதல், தேவையற்ற பொருள்களிலிருந்து உபயோகமான பொருள்கள் தயாரித்தல், ரங்கோலி, சமையற்கலைப் போட்டி, புகைப்படம் எடுத்தல், தனிநடனம், குழு நடனம், மௌன நாடகம், ஆடை அலங்கார வடிவமைப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாள் தொடக்க விழாவை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் ச.பானுமதி சண்முகன் தொடங்கிவைத்தாா். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வெ.சண்முகன் தலைமையுரையாற்றினாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகா் எஸ்.பி.விஸ்வநாதன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலா் ச.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் ச.திருமூா்த்தி மற்றும் முதன்மை நிா்வாக அலுவலா் சு.ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா்(பொறுப்பு) பெ.ரம்யா வரவேற்றாா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம்நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகா் ரக்ஷன் மற்றும் நடிகை தா்ஷா குப்தா ஆகியோா் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா்.

ஒட்டுமொத்த சாம்பியனுக்கான பட்டத்தை ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி வென்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) பெ.ரம்யா, நிா்வாக அலுவலா், வெ.ச.சீனிவாசன், அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா். இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா்கள் மா.ராமச்சந்திரன், ப.செல்வி ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com