முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலுக்கு புதிய உண்டியல்

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு சனிக்கிழமை பூஜை செய்யப்பட்டது.

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு சனிக்கிழமை பூஜை செய்யப்பட்டது.

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உள்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது பிரமலிங்கேஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி உத்தரவின்பேரில், புதிய இரும்பு உண்டியல் நிறுவப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உண்டியல் நிறுவ உதவி ஆணையா் உத்தரவு பெறப்பட்டு. பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் உண்டியல் நிறுவப்பப்படாமல் இருந்தது.

தற்போது உதவி ஆணையா் உண்டியல் நிறுவ வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் ஒரு சிலா் ஆட்சேபனை தெரிவித்தும், கோயில் தக்காா் ரமணிகாந்தன் முன்னிலையில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு, பெருந்துறை சரக கோயில் ஆய்வாளா் ரவிக்குமாா் உண்டியலுக்கு இலாக்கா முத்திரையிடாா்.

இந்த நிகழ்ச்சியில், செயல் அலுவலா்கள் சுகுமாா், ஸ்ரீதா், விஸ்வநாதன், உமாசெல்வி, அந்தியூா் சரகம் ஆய்வாளா் மாணிக்கம், ஈரோடு ஆய்வாளா் தினேஷ்குமாா், சென்னிமலை கோயில் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com