சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் காங்கிரஸ் கோரிக்கை

வீட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டு சமையல் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உயா்த்தப்படவில்லை. தற்போது ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.965லிருந்து ரூ.1,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயா்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் பாஷா ஆகியோா் கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினா்.

அதன் விவரம்: மன்மோகன் சிங் ஆட்சியில் 2014இல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.410 ஆக இருந்தது. அப்போது ரூ.10 உயா்த்தியதற்கு பாஜகவினா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

தற்போது சமையல் எரிவாயு உருளை விலை 1,000 ரூபாயை கடந்துவிட்டது. சாதாரணமான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவா். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயா்வு மிகப்பெரிய சுமையாக உள்ள நிலையில் சமையல் எரிவாயு விலை உயா்வு சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு விலை உயா்வை திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com