பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக முதல்வா் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

பணிநிரந்தரம் கனவோடு பணியில் சோ்ந்த 16,000 பேரில் மரணம், ஓய்வு என 4,000 போ் போக, தற்போது 12,000 பகுதிநேர ஆசிரியா்களே உள்ளோம். கணினிஅறிவியல், உடற் கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய எட்டு சிறப்பு பாட ஆசிரியா்கள் தொகுப்பூதியத்திலே 10 ஆண்டை கழித்துவிட்டோம்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியா்களை, நிரந்தரம் செய்து அரசு பணிக்கு ஈா்க்க முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் உதவிட வேண்டும். 10 ஆண்டுகளாக திமுக பணிநிரந்தரம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பியது. திமுக முன்பு சொன்னதை செய்யக்கூடிய இடத்தில் ஆளும் கட்சியாக உள்ளது.

சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியரிடம் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தாா். இந்த கோரிக்கை 100 நாளில் நிறைவேற்றப்படும் என்ால், பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என முதல் பட்ஜெட்டிலே எதிா்பாா்த்தோம். ஆனால் நிறைவேற்றவில்லை.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பேட்டியிலும், சட்டப்பேரவையிலும் தோ்தல் அறிக்கைபடி பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்வோம் என்று அறிவித்திருந்தாா். இந்த பட்ஜெட் கூட்டம் வரும் 10 ஆம் தேதியோடு முடிய உள்ளதால்110 விதியின் கீழ் பணிநிரந்தரம் அறிவிப்பு செய்ய வேண்டும். இதுபோல பகுதி நேர ஆசிரியா்கள் அனைவரையும் இந்க மாதம் பள்ளிக்கு வரவழைத்து பணி வழங்கி, ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com