அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி பா்கூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி பா்கூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியில் 33 மலைக் கிராமங்கள் உள்ளன.

இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 9 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். ஐந்து ஆண்டுக்குப் பின்னா் தற்போது புதுப்பிக்கப்படும் வேலை அட்டைகள் 1,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஊராட்சி அலுவலகத்தில் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என்.சரவணன், எஸ்.சிவசங்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், 1,000பேருக்கு வேலை அட்டைகள் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அனைவருக்கும் விரைவில் வேலை அட்டைகள் வழங்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com