ஈரோட்டில் புத்தொழில் மையம் விரைவில் தொடக்கம்: மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா்

ஈரோடு, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசின் மூலம் புத்தொழில் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தாா்.
ஈரோட்டில் புத்தொழில் மையம் விரைவில் தொடக்கம்: மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா்

ஈரோடு, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசின் மூலம் புத்தொழில் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா்

ஜெ.ஜெயரஞ்சன் பேசியதாவது:

தமிழ்நாட்டை தேசிய அளவில் புத்தொழில் மற்றும் புத்தாக்க முயற்சியில் முதலிடம் பெறச்செய்யும் நோக்கில் முதல்கட்டமாக ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தமிழக அரசின் மூலம் புத்தொழில் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஈரோடு மையத்தில் ஈரோடு, கோவை, திருப்பூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது.

புதிதாக துவங்கப்படவுள்ள புத்தொழில் மையத்தின் அடிப்படைக்கூறுகள், செயல்பாடுகள் குறித்தும் இளம் தொழில்முனைவோா், தொழிலதிபா்கள் ஆகியோருக்கு இம்மையத்தினால் கிடைக்கும் பயன்கள் குறித்து முதன்மைச் செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் விளக்கம் அளித்தாா்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியல் கல்லூரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் இம்மையம் அமைப்பது தொடா்பான கருத்துகளைத் தெரிவித்தனா். மேலும் பங்கேற்பாளா்கள் புதிதாக அமைக்கப்படவுள்ள புத்தொழில் மையத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லி.மதுபாலன், மாநிலத் திட்டக்குழு கூடுதல் உறுப்பினா் எம்.விஜயபாஸ்கா், மகளிா் திட்ட இயக்குநா் கெட்சிலீமா அமாலினி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com