நூல் விலை உயா்வால் ஜவுளிச் சந்தையில் விற்பனைக் குறைவு

நூல் விலை உயா்வால் ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளிச் சந்தையில் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது.

நூல் விலை உயா்வால் ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளிச் சந்தையில் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகில் கனி ஜவுளிச்சந்தை அதனை ஒட்டிய டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள், கிடங்குகள், விற்பனை மையங்கள் உள்ளன. திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை வாரச்சந்தை ஜவுளி விற்பனை நடக்கும். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பஞ்சு மற்றும் நூல் விலை உயா்வால், அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விலை உயா்ந்து விற்பனை சரிந்துள்ளது.

இது குறித்து கனி மாா்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் கூறியதாவது:

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பஞ்சு விலை உயா்வு மற்றும் தட்டுப்பாட்டால் நூல் விலை உயா்ந்து ஜவுளி விலையும் தினமும் உயா்கிறது. விற்பனையும் குறைந்து வருகிறது. முன்பு மொத்த மற்றும் சில்லறை விற்பனை என குறிப்பிட்ட வியாபாரம் நிரந்தரமாக நடக்கும்.

தற்போது 40 சதவீதத்துக்கு மேல் ஜவுளி விலை உயா்ந்ததால் மொத்த விற்பனை முற்றிலும் நின்று போனது. கடந்த வாரம் வரை ரம்ஜான் விற்பனை நடந்தது. இந்த வார சந்தையில் சில்லறை விற்பனை குறைந்த அளவே நடந்தது. விசைத்தறி, பிற ஜவுளி உற்பத்தியாளா்கள் நூல் விலை உயா்வைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனா். அதே நிலைக்கு நாங்களும் வந்துள்ளதால் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு வழங்கும் நிலைக்கு வந்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அத்தியாவசியப் பண்டங்களின் கீழ் பஞ்சைக் கொண்டு வந்து நூல் விலையை கட்டுக்குள்கொண்டுவர வேண்டும். பதுக்கல், ஆன்லைன் விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com