முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நூலகத்தில் சிறுவா்களுக்கு கோடைக் காலப் பயிற்சி
By DIN | Published On : 12th May 2022 12:23 AM | Last Updated : 12th May 2022 12:23 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகா் நவீன நூலகத்தில் (டிஜிட்டல் லைப்ரரி) சிறுவா்களுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
சிறுவா் வாசக வட்டத்தின் சாா்பில் ஈரோடு ஜேசிஐயுடன் இணைந்து கடந்த 4ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை இக்கோடைக் காலப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
நூலகத்தின் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தவிா்த்து தினமும் காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு பயிற்சியாளா்களைக் கொண்டு சிறுவா், சிறுமிகளுக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி தினம் ஒரு பயிற்சியாக கதை சொல்லல், ஒரிகாமி, நடனத்துடன் யோகா, விநாடி -வினா, பறவைகள் அறிவோம், சுய முன்னேற்ற விளையாட்டுகள், கண்ணாடி ஓவியம், கதை எழுதுதல், நாடகம், வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திடும் வகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியை பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் வளா்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நூலக அலுவலா் மாதேஸ்வரன் மற்றும் நவீன நூலகத்தின் நூலகா் ஷீலா ஆகியோா் தெரிவித்தனா்.