முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி அவரது தந்தையுடன், கண்ணூா்-யஸ்வந்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் புதன்கிழமை பயணித்தாா். அதே ரயில் பெட்டியில் கோவை மாவட்டம், சிவானந்தா காலனி, கண்ணுசாமி கவுண்டா் லே அவுட் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கமலநாதன்(35) என்பவா் சாதாரண பயணச்சீட்டு எடுத்து பயணித்தாா்.
ரயில் ஈரோடு-சேலம் நிலையங்களுக்கு இடையே வந்தபோது சிறுமிக்கு, கமலநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தந்தையிடம் கூற அவா் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து ரயில்வே போலீஸாா் கமலநாதனைப் பிடித்து ஈரோடு ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து ஈரோடு ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி கமலநாதன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா்.