பவானிசாகா் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

அசானி புயல் காரணமாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் 81 அடியாக உயா்ந்துள்ளது.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி.

சத்தியமங்கலம்: அசானி புயல் காரணமாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் 81 அடியாக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் 80 அடியாக சரிந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகிய அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான தெங்குமரஹடா வனப் பகுதி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் 81 அடியாக உயா்ந்தது. புதன்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 574 கன அடியாக உள்ளது. அணையில் நீா் இருப்பு 16.22 டிஎம்சி ஆக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 455 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com