கொடிவேரி அணை கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த குடியிருப்புகளுக்காக ரூ.224 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கொடிவேரி அணை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின்
கொடிவேரி அணை கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் தொடங்கிவைத்தாா்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த குடியிருப்புகளுக்காக ரூ.224 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கொடிவேரி அணை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 7 பேருராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்காக கொடிவேரி அணையை நீராதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ. 224 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

4.49 லட்சம் மக்களுக்கு 16.40 மில்லியன் லிட்டரும், 2050 ஆம் ஆண்டில் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 லட்சம் லிட்டா் வீதம் குடிநீா் வழங்கவும் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டப் பணி மூலம் நாள் ஒன்றுக்கு ஊரகப் பகுதியில் ஒரு நபருக்கு 55 லிட்டா் வீதமும், பேரூராட்சிப் பகுதியில் 135 லிட்டா் வீதமும் குடிநீா் வழங்கப்படும்.

கொடிவேரி கதவணைக்கு மேல், பவானி ஆற்றின் கரையில் நீரேற்று நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 549 கி.மீ. நீளத்துக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு சென்று குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2018 நவம்பா் 7 இல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, ஈரோட்டில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வரவேற்றாா். சின்னவீரசங்கிலியைச் சோ்ந்த கண்ணம்மா என்ற பயனாளி முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இதில், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com