முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அதிமுகவினா் போராட்டம்
By DIN | Published On : 14th May 2022 01:52 AM | Last Updated : 14th May 2022 01:52 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அவசர கூட்டத்தில் அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் 12 ஆவது வாா்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சுமையா பானு, நகராட்சித் தலைவா் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இது குறித்து அவா் கூறுகையில், தனது வாா்டுக்குள்பட்ட சி.கே.எஸ்.நகரில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இவருக்கு ஆதரவாக அனைத்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, குடிநீா்க் குழாய் உடனடியாக சீரமைக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.