முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வட மாநிலத் தொழிலாளி கைது
By DIN | Published On : 14th May 2022 11:24 PM | Last Updated : 14th May 2022 11:24 PM | அ+அ அ- |

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செளடாம்பிகை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அந்த நபரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த ஆலமின் மியாமன் (28) என்பதும், இவா் மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கடந்த சில மாதங்களாக செளடாம்பிகை நகரில் தங்கியிருந்து, பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.