முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
By DIN | Published On : 14th May 2022 11:24 PM | Last Updated : 14th May 2022 11:24 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி அருகேயுள்ள சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (51). கூலி தொழிலாளி. இவா் தனது வீட்டின் முன்புறம் கட்டிலில் படுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரது கையை பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து, அவரது உறவினா்கள் மதியழகனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த மதியழகன் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.