முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கல்வி உதவித் தொகை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 14th May 2022 01:51 AM | Last Updated : 14th May 2022 01:51 AM | அ+அ அ- |

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைகள் பெறுவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தாளாளா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரும், தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி பணியாளா்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவருமான ம.விஜய் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதற்கான நோக்கம், உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள், அதைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியம், இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தாா். கணிதத் துறை உதவிப் பேராசிரியா் யமுனா ராணி வரவேற்றாா்.
கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் ஜெகதா லட்சுமணன், கல்லூரி முதல்வா் கே.மைதிலி ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா்.
தமிழ்த் துறை பேராசிரியை அ.செந்தமிழ்செல்வி நன்றி கூறினாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மாணவா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் அ.செந்தமிழ்ச் செல்வி, மாணவிகள் செய்திருந்தனா்.