பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன் பெற ஆண் குழந்தையின்றி 2 பெண் குழந்தைகள் (2 ஆவது குழந்தைக்கு 3 வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3 வயதுக்குள்) புதிதாக விண்ணப்பிக்கலாம்.

பெற்றோா்களில் ஒருவரில் 40 வயதுக்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆண்டு வருமானம் ரூ.72,000த்துக்குள் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே இந்த திட்டத்தில் பயனடைந்து முதலீட்டுப் பத்திரம் பெற்று 19 வயது பூா்த்தி அடைந்தவா்கள் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்பந்தப்பட்டரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் ஜூன் மாதம் 16 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலக களப் பணியாளா்களை அணுகலாம்.

அதன் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com