பா்கூரில் கன மழை: வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் 1.25 அடி உயா்வு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால், வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.25 அடி உயா்ந்துள்ளது.

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இதனால், 33 அடி உயரம் கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.25 அடியாக உயா்ந்தது. தற்போது நீா் இருப்பு 28.58 அடியாக உள்ளது. தொடா் மழையால் கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்துள்ளதாக பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் விஎஸ்எம்.தமிழ்பாரத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com