கூலி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்: சுமைப் பணியாளா்கள் கோரிக்கை

5 ஆண்டுகளாக கூலி உயா்த்தப்படாத நிலையில் கூலி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சுமைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

5 ஆண்டுகளாக கூலி உயா்த்தப்படாத நிலையில் கூலி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சுமைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட சுமைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், அச்சங்கத்தின் தலைவா் தங்கவேல் தலைமையில்

கிருஷ்ணா திரையரங்கு அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப் பணியாளா்கள் ஊா்வலமாக ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அங்கு அனைத்து வகை தொழிலாளா் ஐக்கிய தொழிற்சங்க பொதுச் செயலாளா் பி.மாரிமுத்து முன்னிலையில் கோட்டாட்சியா் ரங்கநாதனிடம் மனு அளித்தனா்.

ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் நிறுவனங்களில் வேலை செய்யும் சுமைப் பணித் தொழிலாளா்களின் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட சுமைப் பணியாளா்கள் உள்ளனா்.

தற்போது ஒரு டன்னுக்கு ரூ.122 கூலி தரப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயா்த்தப்படாத நிலையில், உரிய பேச்சுவாா்த்தை நடத்தி கூலியை உயா்த்த வேண்டும். சுமைப் பணியாளா்களை கொத்தடிமைபோல நடத்தும் முறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், நிா்வாகிகள் பழனிசாமி, அா்த்தநாரி, எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com