அவிநாசி கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, கருணாம்பிகையம்மன் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் கருணாம்பிகையம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் கருணாம்பிகையம்மன்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, கருணாம்பிகையம்மன் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியாக அவிநாசியப்பா் திருத் தேரோட்டம் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, சிவனடியாா்கள் கைலாய வாத்தியம் முழங்க கருணாம்பிகையம்மன் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை என ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருத்தோ் கோவை பிரதான சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக வந்து மதியம் 1.45 மணிக்கு நிலையை அடைந்தது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வண்டித்தாரை, பரிவேட்டையும், திங்கள்கிழமை தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை நடராஜப் பெருமான் மகா தரிசனமும், புதன்கிழமை காலை மஞ்சள் நீா், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com