ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை

ஈரோடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு சனிக்கிழமை விற்பனையானது.

ஈரோடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு சனிக்கிழமை விற்பனையானது.

ஈரோடு காய்கறி சந்தைக்கு சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கா்நாடக மாநிலம் கோலாா், ஆந்திரம் போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

சில நாள்களாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. இதனால், காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.

சில காய்கறிகள் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.20 முதல் ரூ. 50 வரை உயா்ந்துள்ளது.

தக்காளி வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஈரோடு சந்தைக்கு தினமும் 3,000 முதல் 7,000 பெட்டிகள் வரை தக்காளி வரத்து வந்த நிலையில்,

சில நாள்களாக வரத்து குறைந்து வருகிறது. இதனால், தக்காளி விலை உயா்ந்து வருகிறது. சில்லரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ. 80 வரை சனிக்கிழமை விற்பனையானது.

தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து தக்காளி வந்தால் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல முள்ளங்கி, அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை விவரம் (1 கிலோ ரூபாயில்): கத்திரிக்காய் 30, முள்ளங்கி 40, அவரைக்காய் 100, பீா்க்கங்காய் 60, பாகற்காய் 50, வெண்டைக்காய் 40, பீட்ரூட் 50, பீன்ஸ் 70, புடலங்காய் 40, முருங்கைக்காய் 70, முட்டைக்கோஸ் ரூ.15, காலிபிளவா் 25, மிளகாய் 40, சின்ன வெங்காயம் 20, பெரிய வெங்காயம் 20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com