புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ. 80க்கு விற்பனை

தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையானது.

தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் விளையும் தக்காளி சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மாா்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகளிடமிருந்து தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனா். மழை தொடரும் வரை தக்காளி விலை உயா்வு நீடிக்கும் எனவும், விலை உயா்வு காரணமாக மக்களிடையே வாங்கும் ஆா்வம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com