ஈரோடு: சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தொழில் வணிக சங்கங்கள் கோரிக்கை 

சொத்துவரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு: சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தொழில் வணிக சங்கங்கள் கோரிக்கை 

சொத்துவரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் 23 வது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சங்க கட்டடத்தில் நடந்தது. தலைவர் வி கே ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் பி ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம், துணைத்தலைவர்கள் பாலு என்கிற தனபாலன், பி கே என் சந்திரசேகரன், வி ராஜமாணிக்கம் சண்முகசுந்தரம், துணைச் செயலாளர்கள்  மூர்த்தி செல்வம் என்கிற சி பழனிசாமி, கே ஜிப்ரி துணைப் பொருளாளர் பி கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, இயக்குனர்கள் பாலமுருகன் சிவகுமார், ரங்கசாமி, சுப்ரமணி, கே மாணிக்கம், முன்னாள் தலைவர் ஜெகதீசன் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, இந்து கல்வி நிலையம் தாளாளர் கே.கே.பாலுசாமி, செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம், அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் சின்னசாமி  உட்பட பல நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: அரசு சொத்து வரியை நூற்று ஐம்பது சதம் வரை உயர்த்தியுள்ளது. கரோனா காலகட்டத்தில் பல தொழில்கள் நலிவடைந்து தற்போது மீண்டு வருகிறது. இந்நிலையில் சொத்து வரியை 10 அல்லது 25 சதம் மிகாமல் இருக்க வேண்டும். 
கடந்த பத்தாண்டுகளுக்கு கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சதுரடி அடிப்படையில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 100 சதவீத வரி உயர்வு என்பது  வணிகர்களை பாதிக்கும். எனவே அக் கட்டிடங்களுக்கு  வரிவிலக்கு அளிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு 25 வரை வரி உயர்வு செய்யலாம். நூல் பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

ஈரோடு நேதாஜி சாலையில் உள்ள சாலையோர ஜவுளி வியாபாரிகளுக்கும் முன்பு மார்க்கெட்டில் வணிகம் செய்த வியாபாரிகளுக்கும் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் தனி அரங்கம் அமைத்து தர வேண்டும். லாரிகளில் சரக்கு ஏற்றுவது இறக்குவதற்கு நடைமுறை கூலி அதிகம் உள்ளது. எனவே தொழிலாளர் மற்றும் லாரி ஏஜெண்டுகள் பாதிக்காத வகையில் அரசு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து மஞ்சள் உள்ளிட்ட 39 பொருட்களுக்கு மாநில அரசு ஒரு சதம்  செஸ் விதித்துள்ளது.  இதனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்ட விற்பனை குழு அலுவலகங்களும்  கணினிமயமாக்கப்பட்டவேண்டும். விற்பனை ரசீது ஆன்லைன் மூலம் எளிமையாக்க வேண்டும.

விற்பனைக்கூட அலுவலர்கள் ஜிஎஸ்டி வலைதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் சந்தை கட்டணங்களை வசூல் செய்ய வேண்டும். முன்பு தமிழகத்தில் மஞ்சளுக்கு விற்பனை வரி இல்லாத நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு தமிழகத்தில் மாநில வரியாக இரண்டரை சதவீதம் கூடுதல் வருவாய் வருகிறது. எனவே வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும் மஞ்சளுக்கு சந்தை கட்டண விலக்கு அளிக்க வேண்டும். வேளாண் விளைபொருள் விற்பனை கட்டமைப்பு களிலும் கிடங்கு உரிமையாளர்கள் அல்லது கமிஷன் ஏஜென்ட் தரப்பு பிரதிநிதிகள் இடம்பெற செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் பிரதி மாதம் வணிகர்கள் கூட்டங்களை நடத்தி குறைகளை களைய வேண்டும். தமிழக வேளாண் விளைபொருள்  விற்பனை சட்டங்களில் வணிகர்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தும் சரத்துக்களை நீக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com