சத்தியமங்கலத்தில் 2 டன் குட்கா பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 05th November 2022 01:19 AM | Last Updated : 05th November 2022 01:19 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிள்ள 2 டன் குட்கா பொருள்களை சத்தியமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 68 சாக்கு மூட்டைகளில் இரண்டு டன் எடையுள்ள குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சஜீா் (31) என்பவரை பிடித்து விசாரித்தனா். அதில் கா்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு குட்கா பொருள்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருள்கள் ஏற்றி வந்த ஓட்டுநா் சஜீா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இதில் தொடா்புடைய பரத் மற்றும் வாகன உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.