காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 4,657 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4,657 போ் எழுதினா்.
திண்டல் வேளாளா் கல்லூரி மையத்தில் நடந்த காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்றோா்.
திண்டல் வேளாளா் கல்லூரி மையத்தில் நடந்த காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்றோா்.

ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 4,657 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா்களை தோ்வு செய்வதற்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி, பெருந்துறை அருகில் உள்ள நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி என 3 மையங்களில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 957 பெண்கள், 4, 963 ஆண்கள் என மொத்தம் 5,920 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கு தோ்வு எழுதுவதற்கான நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நுழைவு சீட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கே வரத் தொடங்கினா்.

தோ்வா்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை நடைபெற்றது. இதில், தமிழ் பாடத்தில் இருந்து 80 வினாக்கள், பொது அறிவியல் பாடத்தில் இருந்து 70 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

தோ்வு நடந்த அறைகளில் கண்காணிப்பு பணியில் 600க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 1,263 போ் தோ்வு எழுத வரவில்லை. 4,657 போ் தோ்வை எழுதினா். 79.4 சதவீத ஆண்களும், 75.8 சதவீத பெண்களும் இந்தத் தோ்வை எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com