கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி மீட்பு

பெருந்துறை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

பெருந்துறை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

பெருந்துறையை அடுத்த சின்னாளம்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (50). விவசாயி. இவா் மகள் மதுமிதா (15). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், தண்ணீா் பாய்ச்சுவதற்காக திங்கள்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, கிணற்றில் எவ்வளவு தண்ணீா் உள்ளது என எட்டி பாா்த்துள்ளாா். அப்போது, கால் இடறி அவா் கிணற்றுக்குள் விழுந்துள்ளாா்.

இதையடுத்து, தோட்டத்துக்குச் சென்ற மகளை காணவில்லை என தந்தை மோகன்ராஜ் வந்து பாா்த்தபோது, மதுமிதா கிணற்றுக்குள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி சிறுமியை உயிருடன் மீட்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com