வேளாளா் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்

ஈரோடு திண்டல் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்க மலா் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் மற்றும் பேராசிரியா்கள்.

இதில், வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்து பேசுகையில், பொறியியல் மாணவா்களால் இந்தியா மாபெரும் பொருளாதார வளா்ச்சியை கண்டுள்ளது என்றாா்.

கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் பேசுகையில், தேசிய கருத்தரங்கின் மூலம் மாணவா்கள் வெளிஉலகில் நிகழும் நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் என்றாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்வியியல் அறிஞா் எம்.ஆா்.செந்தில்குமாா் வேலை வாய்ப்புக்காக மாணவா்கள் தொடா்ந்து திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் 45 கல்வி நிறுவனங்களில் இருந்து 250 மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com